வடக்கில் புதிய பேருந்து கட்டுப்பாடுகள்: 2 ஆண்டுகள் வரை சிறை- சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples Sri Lanka Government Law and Order
By Thevanthan Sep 22, 2026 05:29 PM GMT
Report

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து பேருந்துகளும் “சிசுசெரிய” சேவையின் கீழ் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய அனுமதிப்பத்திரங்களுடனேயே சேவையில் ஈடுபட வேண்டும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வாரம் முதல் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றும் பேருந்துகளுக்கான அறிவிப்பு

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு, தேவையான அனுமதிகளைப் பெற்று மாத்திரமே சேவையில் ஈடுபட வேண்டும் என அதிகார சபையால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், உரிய பதிவு மற்றும் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் சில பேருந்துகள் தொடர்ந்தும் இந்த சேவையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் புதிய பேருந்து கட்டுப்பாடுகள்: 2 ஆண்டுகள் வரை சிறை- சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை | New Bus Restrictions In The North

இவ்வாறான பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக நேரடியாக எச்சரிக்கைகளும் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை உரிய பதிவுகளை மேற்கொள்ளாத அல்லது நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாத தரப்பினர் தொடர்ந்தும் பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நியதிச் சட்டத்தின்படி, வடக்கு மாகாணத்தில் பொதுமக்களை கட்டணத்துக்கு ஏற்றிச் செல்லும் வழமையான அல்லது விசேட பேருந்துச் சேவையை செல்லுபடியாகும் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி மேற்கொள்ள முடியாது.

அனுமதிப்பத்திரமின்றி பயணிகள் போக்குவரத்து

அனுமதிப்பத்திரமின்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டமை தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதன்முறையாக அதிகபட்சம் 5,000 ரூபா அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும், இரண்டாவது முறையாக அதிகபட்சம் 10,000 ரூபா அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும், தொடர்ந்து மீண்டும் அதே குற்றம் இடம்பெற்றால் அதிகபட்சம் 15,000 ரூபா அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நியதிச் சட்டத்தின் 44ஆம் பிரிவு குறிப்பிடுகின்றது.

வடக்கில் புதிய பேருந்து கட்டுப்பாடுகள்: 2 ஆண்டுகள் வரை சிறை- சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை | New Bus Restrictions In The North

மேலும், அதிகார சபையால் எழுத்துமூலம் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பேருந்துகளில் பிரவேசித்து, அவை அனுமதிப்பத்திரத்துக்கு அமைவாகச் சேவையில் ஈடுபடுகின்றனவா என்பதையும், தேவையான ஆவணங்கள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் பரிசோதிக்கும் அதிகாரம் நியதிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்துச் சேவையை நடத்தும் அனைத்து பேருந்து உரிமையாளர்களும் இயக்குநர்களும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாகத் தமது பேருந்துகளை உடனடியாகப் பதிவு செய்து, தேவையான தகுதிகள் மற்றும் அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் கேட்டுக்கொண்டார். இந்த வாரம் முதல் முன்னறிவிப்பின்றி திடீர் சோதனைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவுகள்! 6 பேருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவுகள்! 6 பேருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அதிகரிக்கும் எரிபொருள் விலை.. அரசாங்கம் வழங்கவுள்ள சிறப்பு மானியம்

அதிகரிக்கும் எரிபொருள் விலை.. அரசாங்கம் வழங்கவுள்ள சிறப்பு மானியம்


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US