குச்சவெளி பிச்சமல் விகாரையில் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம்: செந்தில் தொண்டமானால் நிதி ஒதுக்கீடு
திருகோணமலை - குச்சவெளியில் (Trincomalee - Kuchchaveli) உள்ள பிச்சமல் விகாரைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் (Senthil Thondaman) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் பௌத்த மதகுருவிடம் ஆசீர்வாதம் பெற்றதுடன் நடைபெற்று வரும் விகாரை புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்கு 1.5 மில்லியன் ரூபா நிதியும் தொல்பொருள் அருங்காட்சியகத்தை ஆரம்பிப்பதற்கு 3.5 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
பராமரிக்கப்படாத விகாரை
மேலும், உள்ளூராட்சி சபைகளால் பராமரிக்கப்படாத விகாரையை சுற்றியுள்ள கடற்கரையை ஆய்வு செய்துள்ளார்.

இந்நிலையில், 24 மணி நேரத்திற்குள் கடற்கரையை சுத்தம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri