விவசாயிகளுக்காக புதிய டிஜிட்டல் செயலி அறிமுகம்!
இலங்கையின் சோளத் தேவை மற்றும் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கான “Maize Stock” எனும் புதிய இணையவழித் தகவல் முறைமை மற்றும் செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி நேற்று(20.02.2026) விவசாய அமைச்சினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
புதிய செயலி அறிமுகம்
இந்த புதிய டிஜிட்டல் தளம் சோளச் சந்தையில் நிலவும் தரவுப் பற்றாக்குறையை நீக்கி, நாட்டில் உள்ள சோளக் கையிருப்பு குறித்த சரியான தகவல்களை வழங்குவதன் மூலம், இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பான முடிவுகளைத் தரவுகளின் அடிப்படையில் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தமது அறுவடைக்கான சந்தை தேவையைக் கண்காணித்து, நியாயமான விலையைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும். உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் கையிருப்பு சேகரிப்பாளர்கள் தமக்குத் தேவையான அளவுகளை முன்கூட்டியே திட்டமிட முடியும்.
இந்நிலையில், இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன "இந்த முறைமை சோளத் துறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும். துல்லியமான தரவுகள் மூலம் விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாக்க முடியும். விவசாயிகள் மற்றும் சிறு வர்த்தகர்கள் இதில் உடனடியாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam