புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை
இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் (PSTA) தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் மனித உரிமை ஆர்வலர்கள் தமது கவலையை வெளிக்காட்டியுள்ளனர்
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் அம்பிகா சற்குணநாதன் போன்ற சட்ட வல்லுநர்கள் இந்த புதிய சட்டமூலம் பழைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) விட மோசமானது என எச்சரிக்கின்றனர்.
பயங்கரவாதம்
பயங்கரவாதம் என்பது கொலை, கடத்தல் அல்லது கடுமையான உடல் காயம் விளைவிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டுள்ளனர்.சாதாரண காயம்", சொத்து சேதம் மற்றும் "நாட்டின் இறையாண்மையை மீறுதல்" போன்ற தெளிவற்ற விடயங்களையும், புதிய யோசனை, பயங்கரவாதமாக வகைப்படுத்துகிறது.

இது சிவில் சமூக செயற்பாட்டாளர்களை குறிவைக்க பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.புதிய யோசனையின் கீழ், ஒரு நபர் நீதிமன்ற விசாரணையின்றி 2 ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட வாய்ப்புள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை விடுவிக்கும் அல்லது தடுத்து வைத்தலின் சட்டபூர்வ தன்மையை பரிசீலிக்கும் நீதவான்களின் அதிகாரம் இந்த சட்டத்தின் மூலம் பறிக்கப்படுகிறது.
அவசரகால நிலை
தடுத்து வைக்கும் உத்தரவை பாதுகாப்பு அமைச்சருக்கு பதிலாக பாதுகாப்புச் செயலாளர் பிறப்பிக்க முடியும், இது பொறுப்புக்கூறலை குறைப்பதாக அமையும்.பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள கைது செய்யும் அதிகாரம் இராணுவம் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இது நாட்டில் ஒரு "நிரந்தர இராணுவ அவசரகால நிலையை" உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் அல்லது மனித உரிமை மீறல்கள் குறித்த செய்திகளை வெளியிடுவது "இரகசிய தகவல்களை வெளியிடுதல்" என்ற பெயரில் குற்றமாக்கப்படலாம்.
பிடியாணை இன்றி தேடுதல் நடத்தவும், தொலைபேசி உரையாடல்களை இடைமறிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறதுஎனவேஇந்த சட்டமூலம் "அரசைப் பாதுகாப்பதை" நோக்கமாகக் கொண்டிருப்பதை விட, "மக்களைப் பாதுகாப்பதையே" முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும் என ஐநா நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம்: இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு தங்க பிஸ்கட் - அம்பலமான விடயம்
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan