எரிவாயு விநியோகம் மேலும் தாமதமாகும்! லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு
புதிய இணைப்பு
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் மேலும் இரண்டொரு நாட்கள் வரை தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு ஏற்றிக் கொண்டு இலங்கை நோக்கி வந்த கப்பல் தற்போதைக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக சென்னைத் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
அதன் பின்னர் கப்பல் கொழும்பு வந்த பின்னரே எரிவாயு இறக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படும்.
எனவே இன்னும் குறைந்தது மூன்று நாட்களின் பின்னரே லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
முதலாம் இணைப்பு
இன்று நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் வரையில், எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்றைய தினமும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற மாட்டாது என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் இன்று பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
3,500 மெற்றிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், 7,500 மெற்றிக் தொன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், நேற்றும், நேற்று முன்தினமும் கூட சமையல் எரிவாயு விநியோகத்தினை லிட்ரோ நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.