பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மாணவர்கள் பயன்படுத்தும், பென்சில் மற்றும் வர்ண பூச்சுகள் தொடர்பில் பெற்றோர்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்காக பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் மகிந்த விக்ரமாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
கொள்வனவு
அவர் மேலும் கூறுகையில், பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைத் தயாரிப்பதற்காக வெவ்வேறு இரசாயனங்களும் உலோகங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றைக் கொள்வனவு செய்யும் போது இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வர்ண பூச்சுகள்
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பிரியந்த பெர்னாண்டோ கருத்துரைத்துள்ளார்.

இதன்போது தரமற்ற வர்ண பூச்சுகள் தொடர்பில் பெற்றோர்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு