காலி சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய குழு
காலி சிறைச்சாலைகள் பிரதி அத்தியட்சகர் தலைமையில் விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலி சிறைச்சாலையில் கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மோதல்
இதேவேளை, காலி சிறைச்சாலைகளின் செயற்பாடுகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் (26) காலி சிறைச்சாலையில் கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குவாதம்
கைதிகளுக்கிடையில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
