இலங்கையில் ரணிலுக்கு ஆதரவாக உருவாகவுள்ள புதிய கூட்டணி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவை வழங்கும் வகையிலான புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் இரண்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்
குறித்த பேச்சுவார்த்தையானது நேற்று (14.05.2024) மாதிவெலயில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
அரசியல் கூட்டணி
இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ஒரு பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Sliva) அணியும், நாடாளுமன்ற உறுப்பினர் நிமல்லான்சாவின் (Nimal Lanza) புதிய கூட்டணி பிரதிநிதிகளும் பங்குபற்றியுள்ளனர்;

இந்த உரையாடலில் இரண்டு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருபது பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், அம்பாந்தோட்டையில் (Hambantota) எதிர்கால பேரணியை நடத்துவதற்கான திட்டமிடலுடன் புதிய அரசியல் கூட்டணிக்கான அடித்தளங்களை அமைப்பது குறித்து இந்த கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri