சுதந்திரக் கட்சியின் புதிய நிர்வாகம் : தேர்தல் ஆணைக்குழுவின் குற்றச்சாட்டு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய நிர்வாகம் தொடர்பில் எவ்வித விழிப்புணர்வும் வழங்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
அண்மையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிரிந்து தலைவர்கள் மற்றும் செயலாளர்களை நியமித்துக் கொண்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
இதற்கிடையே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தரப்பினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
புதிய நியமனம்
இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதன் பின்னர், அவர் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ள பின்னணியில், அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe), செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் மூலம் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, கட்சியின் பதில் பொதுச் செயலாளராக கடமையாற்றிய துஷ்மந்த மித்ரபாலவுக்கு (Dushmantha Mithrapala) எதிராகவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், புதிய பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கட்சியின் புதிய நிர்வாகம் தொடர்பான விபரங்களை மிக விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவுள்ளதாக மைத்திரி தரப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
