மலையக அதிகார சபை மீது கை வைக்கவே வேண்டாம்! ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்

Sri Lanka Upcountry People Anura Kumara Dissanayaka Mano Ganeshan
By Rakesh Sep 09, 2025 05:21 AM GMT
Report

பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை மூடி விட, உங்கள் அரசால் எடுக்கப்படும் முயற்சியை உடனடியாகக் கை விடுங்கள் என  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நுவரெலியா, கொழும்பு - அவிசாவளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, பதுளை, மொனராகலை, காலி, மாத்தறை, குருநாகல் ஆகிய மாவட்ட பெருந்தோட்டப் பிராந்தியங்களில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் சமூக, பொருளாதார, கலாசார வளர்ச்சிகளில் வளர்ச்சி குன்றிய பிரிவினர் என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

நாமலுக்காக களமிறங்கிய புது முகம் - பெரமுனவுக்குள் குழப்பம்

நாமலுக்காக களமிறங்கிய புது முகம் - பெரமுனவுக்குள் குழப்பம்

இனவாதம்

இது 200 வருட சாபம். இதற்குக் காரணம், இந்தச் சமூகம் இந்த நாட்டின் தேசிய வரம்புக்குள் கொண்டு வரப்படாமல் இன ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்டமை ஆகும்.

மலையக அதிகார சபை மீது கை வைக்கவே வேண்டாம்! ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம் | Never Lay A Hand Hill Authority Mano Request Anura

இதற்குக் காரணம், இவர்கள் அந்நியர்கள், இவர்கள் தமிழர்கள், இவர்களுக்கு காணி வழங்கக் கூடாது, வீடு வழங்கக் கூடாது, தேசிய கல்வி கட்டமைப்புகள் கொண்டு வரக் கூடாது, தேசிய சுகாதார கட்டமைப்புகள் கொண்டு வரக் கூடாது, பிரஜாவுரிமை வழங்கக் கூடாது என எம் மீது காட்டப்பட்ட, காட்டப்படும் இனவாதம் தான்.

200 வருட ஒடுக்கு முறையில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வரும் இந்தச் சமூகத்தின், கல்வி தரும் பாடசாலைகள், 1976 ஆம் ஆண்டிலேயே தேசிய கல்விக் கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டன.இவற்றை வெறும் ஒரு துறை சார்ந்த அமைச்சால் மட்டும் செய்ய முடியாது.

ரணில் - கோட்டாபயவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

ரணில் - கோட்டாபயவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

மலையக அதிகார சபை 

அமைச்சுகளுக்கு மேலாக, பல்வேறு துறை சார்ந்த அமைச்சுகளின் பணிகள் கூட்டி இணைக்க பட வேண்டும். இந்தப் பிரதான தேவை பின் புலத்தில், மலையக மக்களின் விசேட குறைதீர் கொள்கை தேவை அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனமே, மலையக அதிகார சபை ஆகும்.

மலையக அதிகார சபை மீது கை வைக்கவே வேண்டாம்! ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம் | Never Lay A Hand Hill Authority Mano Request Anura

நீங்கள் இன்று இதை, ஓர் அமைச்சின் அங்கமாக மாற்ற முயல்கின்றீர்கள். அமைச்சு என்பதும் அதன் நடவடிக்கைகளும், நாட்டின் ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படுகின்றன. நாளை குறிப்பிட்ட அமைச்சு இல்லாமல் போகுமானால், அந்த அமைச்சின் அங்கமும் காணாமல்போய் விடும்.

ஆனால், அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, சட்டம் மூலமாக உருவாக்கப்பட்ட திணைக்களங்கள், அதிகார சபைகள், என்பன அமைச்சுகள், அரசுகள் மாறுகின்ற காரணத்தால், மாறி விடாது. காணாமல்போய் விடாது. இந்த அடிப்படை உண்மையை நீங்கள் புரிந்து கொண்டு, இந்த முயற்சியை நிறுத்த வேண்டும்.

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்று இம்மாதத்துடன் ஒரு வருடம் நிறைவு பெறுகின்றது. வாழ்த்துக்கள். மலையக மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வழங்கியுள்ளீர்கள். ஆனால், இந்த ஒரு வருடத்தில் சொல்லிக் காட்ட, எடுத்துக் காட்ட, மலையகப் பிராந்தியத்துக்கு உங்கள் அரசு காத்திரமாக எதுவும் செய்து விடவில்லை.

ஐ.நா. கூட்டத் தொடர் குறித்து இலங்கை நாடாளுமன்றில் விவாதம்

ஐ.நா. கூட்டத் தொடர் குறித்து இலங்கை நாடாளுமன்றில் விவாதம்

கோரிக்கை

ஆனாலும், நாம் பொறுமையாகக் காத்திருக்கின்றோம். நீங்கள் எதுவும் செய்யவில்லை என்பதை விட, இன்று, இருப்பதையும் பிடுங்கி எடுக்க முயல்கின்றீர்கள். அதையும் நாம் பொறுமையாக ஏற்றுக்கொண்டு இருக்க முடியாது என்பதை உங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்.

மலையக அதிகார சபை மீது கை வைக்கவே வேண்டாம்! ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம் | Never Lay A Hand Hill Authority Mano Request Anura

நீங்கள் செய்ய முயலும் இந்தக் காரியத்தின் பாரதூரத் தன்மையைத் தெரிந்து கொண்டா, அல்லது தெரியாமலா, நீங்கள் செய்கின்றீர்கள் என எனக்கு விளங்கவில்லை.

எதுவாக இருந்தாலும், 2018 ஆம் வருட 32 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் நாம் எமது ஆட்சிக் காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, "மலையக அதிகார சபை" என எம்மால் அறியப்படும் "பெருந்தோட்டப் பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை"யை மூடி விட, உங்கள் அரசால் எடுக்கப்படும் முயற்சியை உடனடியாகக் கைவிடுங்கள் எனக் கோருகின்றேன் என்றுள்ளது.

குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US