நாமலுக்காக களமிறங்கிய புது முகம் - பெரமுனவுக்குள் குழப்பம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாக நாமல் ராஜபக்ஷ மீது மையப்படுத்தி பல்வேறு துறைகளில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட பாடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நடவடிக்கைகளின் சமீபத்திய நடவடிக்கையாக தேர்தல் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெர்னாண்டோவுக்கு முன்னுரிமை
கடந்த வாரம் இது போன்ற பல அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கல்கமுவ தொகுதியின் அமைப்பாளராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டமை தொடர்பில் அரசியல் அவதானிகள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர்.
தற்போது நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமான திஸ்ஸ குட்டியாராச்சி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஜோஹன் பெர்னாண்டோவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிடுவது தொடர்பில் பல்வேறு காய்நகர்த்தல்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025