மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் நேற்று (09.01.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நரம்பியல் சத்திர சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர்.
மன்னாரில் கிளினிக்
இதனால் அவர்கள் பெரும் பிரயாண மற்றும் பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த நிலைக்கு தீர்வாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரின் சேவையில் இந்த கிளினிக் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட கிளினிக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி நேற்று (09) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத், நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எம்.பிரியதர்ஷன், சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எஸ்.தர்ஷன், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை





விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam