வடக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நெதர்லாந்து உதவிகளை வழங்கும்: நெதர்லாந்து தூதுவர் (video)
பொருளாதார ரீதியிலான பின்னடைவினை கண்டுவரும் வடபகுதியில், பெண் தலைமைத்துவ குடும்பங்களை வலுப்படுத்த வாழ்வாதாரத்தினை ஊக்குவிக்க விஷேட செயற்றிட்டத்தினை முன்னெடுக்க தொடர்ந்தும் நெதர்லாந்து உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹோர்பாக் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும்
யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை நேற்று (24.01.2023) சந்தித்த போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதன்போது பெண் தலைமைத்துவ குடும்பங்களின் சமகால நிலைமைகள், நெதர்லாந்து அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர்கள், யுவதிகளின் தற்கால நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர், இலங்கைக்கான வடமாகாண
ஒருங்கிணைப்பாளர் எஸ்.சந்திரகீர்தனன் மற்றும் நிகழ்ச்சி திட்ட
உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri