இலங்கையில் தாயை தேடும் ஐரோப்பா வாழ் இலங்கை பெண்
ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர், தனது உயிரியல் தாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்..
39 ஆண்டுகளுக்கு நெதர்லாந்திலுள்ள குடும்பம் ஒன்றுக்கு தத்து கொடுத்த நிலையில், தற்போது உண்மையான தாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
39 வயதான இந்திராணி என்ற பெண்ணே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை பெண்
இதற்காக எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கை வரவுள்ளார். அவரிடம் உள்ள ஆவணங்களுக்கமைய, அவர் 1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதியன்று கொழும்பில் உள்ள சொய்சா மகளிர் வைத்தியசாலையில் பிறந்துள்ளார்.

மேலும் அவரது தாயார் 1965ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 19ஆம் திகதியன்று பிறந்தவர் என பதிவாகியுள்ளது. அவரது தாயார் 20 வயதிற்குள் மூன்று குழந்தைகளின் தாயாக இருந்தார்.
அவர் திருமணமாகாத பெண் மற்றும் அவரது குடியிருப்பு முகவரி 136/11 ப்ளூமெண்டல் வீதி கொட்டாஞ்சேனை ஆகும்.
ஐரோப்பிய நாடு
இந்திராணியின் தாயார் ஒரு பிரமாணப் பத்திரத்தில் தனது குழந்தை நீர்கொழும்பு மருத்துவமனையில் பிறந்ததாக அறிவித்தார்.

தற்போது நெதர்லாந்தில் வசிக்கும் இந்திராணி, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனது தாயை தேட ஜுன் மாதம் இலங்கை வருவமற்கு எதிர்பார்த்துள்ளார்.
இலங்கையில் இருந்து நெதர்லாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri