இஸ்ரேல் தேர்தலைக் சீர்குலைக்க ஈரான் முயற்சிக்கலாம்! நெதன்யாகு எச்சரிக்கை
இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலைச் சீர்குலைக்க ஈரானும் அதன் ஆதரவு அமைப்புகளும் முயற்சிக்கக்கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்ட காணொளிப் பதிவொன்றில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
எங்கள் எதிரிகளான ஈரானும் அதன் ஆதரவு அமைப்புகளும் தேர்தலைக் சீர்குலைக்கும் நோக்கில் தாக்குதல்களை நடத்தி எங்களுக்குச் சவால் விடுக்கக்கூடும் என்பதற்கான உளவுத்துறைச் சான்றுகள் தங்களிடம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆகிய இருவிதமான இராணுவ நடவடிக்கைகளுக்கும் இஸ்ரேலியப் படைகள் ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டாம், நீங்கள் கடுமையான பதிலடிகளைச் சந்திக்க நேரிடும் என ஈரானை நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
என் கை கால் நல்லா தான் இருக்கு.. சிவகார்த்திகேயன் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த பிளாக் பாண்டி விளக்கம் Cineulagam
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan