கட்டாருக்கு நெதன்யாகு விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
கட்டார், ஹமாஸ் உறுப்பினர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வாறு வெளியேற்றாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என நெதன்யாகு அச்சுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடும் எச்சரிக்கை..
அதன்படி, நேற்று தோஹாவில் ஹமாஸ் பேச்சுவார்த்தையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு எதிரான சீற்றத்தை புறம் தள்ளுவது போல், நெதன்யாகு கட்டார் மீது மேலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தியுள்ளார்.

“நான் கட்டார் மற்றும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அனைத்து நாடுகளுக்கும் கூறுகிறேன், நீங்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும் அல்லது அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.
ஏனென்றால் நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நாங்கள் அவர்களை நீதியின் முன் நிறுத்துவேன்” என்று இஸ்ரேலிய பிரதமர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri