கந்தளாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயம்
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணைக்கட்–சேருவில வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை பின்னால் வந்த கார் மோதியதில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் பேராறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இருவர் காயம்
குறித்த இளைஞர்கள் கோழி இறைச்சி கழிவுகளை முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றபோது, அணைக்கட்–சேருவில வீதியில் தமது வண்டியை நிறுத்தியிருந்த நிலையில், பின்னால் வந்த கார் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.
காயமடைந்த இருவரும் உடனடியாக கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குப் பின்னர் கார் சாரதிக்கும், காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து, பொலிசார் தலையீடு செய்து நிலைமை அமைதிப்படுத்தினர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், கார் சாரதி மதுபோதையில் இருந்தமையால் விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது குறித்து கந்தளாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
