மீண்டும் போருக்கு திரும்ப இஸ்ரேல் தயார்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நெதன்யாகு
ஆறு வாரங்களுக்கு மேலான போரின் மூலம் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் ஆட்சியின் “அடித்தளங்களை குலைத்துவிட்டன” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த இரு வார போர்நிறுத்தத்திற்குப் பின்னரும், வாஷிங்டனுடன் இஸ்ரேலின் ஒத்துழைப்பு முந்தையதை விட அதிகமாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
முக்கிய இலக்குகள்
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இஸ்ரேல் முக்கிய இலக்குகளை எட்டியுள்ளது என்றும், நாடு “முன்பைவிட பலமாக” உள்ளது என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இன்னும் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் உள்ளன என்றும், தேவையான எந்த நேரத்திலும் மீண்டும் போருக்கு திரும்பத் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மேற்கொண்ட கடைசி நேர முயற்சிகளின் விளைவாக உருவான போர்நிறுத்தம் குறித்து, தன்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுடன் முழுமையான ஒருங்கிணைப்பில் செய்யப்பட்டதாகவும், “எங்களை கடைசி நேரத்தில் யாரும் ஆச்சரியப்படுத்தவில்லை” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த இரு வார “தற்காலிக போர்நிறுத்தம்” இஸ்ரேலின் இலக்குகளை அடையும் பாதையில் ஒரு கட்டமாக மட்டுமே உள்ளது என்றும், அது இறுதி அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்! உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இறுதி முடிவு அமெரிக்காவின் கைகளில்..
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை
இதேவேளை, ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, அதன் பலவீன நிலையை காட்டுகிறது என்றும் நெதன்யாகு கூறினார்.
ஹோர்முஸ் நீரிணையை திறந்ததோடு, தடைகள் நீக்கம், இழப்பீடு, நிரந்தர போர்நிறுத்தம் மற்றும் லெபனான் தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஈரான் கைவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், ஈரானின் Fars News Agency இதற்கு முரணான தகவலை வெளியிட்டு, லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலளிப்பாக ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் செல்லும் போக்குவரத்தை மீண்டும் நிறுத்தியதாக தெரிவித்தது.
மேலும், ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பது ஈரானின் நிலைப்பாடு என்றும் கூறப்பட்டது.
அதே நேரத்தில், அமெரிக்கா–இஸ்ரேல் உறவு மத்திய கிழக்கு அரசியலை மாற்றிவருகிறது என்றும், இரு நாடுகளுக்கிடையேயான கூட்டாண்மை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.
மிகப்பெரிய அச்சுறுத்தல்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து, எங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
அதை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம் என்று அவர் கூறினார். கடந்த ஒரு ஆண்டில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகள் இல்லையெனில், ஈரான் ஏற்கனவே அணு ஆயுதம் பெற்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்போது, ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திறன்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
ஈரான் இதுவரை இல்லாத அளவுக்கு பலவீனமாக உள்ளது;இஸ்ரேல் இதுவரை இல்லாத அளவுக்கு பலமாக உள்ளது என்று நெதன்யாகு தெரிவித்தார்.
போரில் அடைந்த வெற்றிகளை பட்டியலிட்ட அவர், ஈரானின் ஏவுகணை உற்பத்தி அமைப்புகள், அணு திட்டங்கள், தொழிற்சாலைகள், இராணுவ அடித்தளங்கள் உள்ளிட்ட பலவற்றை இஸ்ரேல் அழித்துவிட்டதாகக் கூறினார்.
மீண்டும் போர்
மேலும், ஈரானின் பல அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நாட்டுக்கு வெளியே அகற்றப்படும் என்றும், அது ஒப்பந்தத்தின் மூலமாகவோ அல்லது மீண்டும் போரின் மூலமாகவோ நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இஸ்ரேல் இன்னும் சில இலக்குகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்றும், அவை ஒப்பந்தம் மூலமாகவோ அல்லது போரின் மூலம் கண்டிப்பாக அடையப்படும் என்றும் நெதன்யாகு உறுதியளித்தார்.
“எந்த நேரத்திலும் மீண்டும் போருக்கு திரும்ப இஸ்ரேல் தயாராக உள்ளது,” என்று அவர் முடிவில் தெரிவித்தார்.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 18 மணி நேரம் முன்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஸ்ரீலீலா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. ஷார்ட் உடையில் பார்பி போல வந்த வீடியோ Cineulagam