ஈரானை தாக்க வாருங்கள்..! சர்வதேசங்களுக்கு அழைப்பு விடுத்த நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்தும் ஈரானுக்கு எதிரான போரில் உலக நாடுகள் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
தெற்கு இஸ்ரேலின் அராட் நகரில் நடந்த தாக்குதல் இடத்தைப் பார்வையிட்ட போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை வரலாற்றில் அதிக சதவீதத்தில் உயர்ந்த எரிபொருள் விலை : தனியார் பேருந்துகள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு
போர்த்திசையில் நாடுகள்..
இதன்போது அவர், “சில நாடுகள் முன்னேறுகின்றன, சில நாடுகள் ஏற்கனவே இந்த திசையில் நகர்ந்து கொண்டிருக்கின்றன, மேலும் பல நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் பொதுமக்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாகவும், ஐரோப்பாவின் ஆழமான பகுதிகளையும் தாக்கும் திறன் அவர்களுக்கு உள்ளதாகவும் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த அழைப்பை நெதன்யாகு வெளியிட்டுள்ளார்.
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri