நேபாள வெள்ளம்- 10 நாட்களுக்குப் பின் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி உயிருடன் மீட்பு
நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் கடந்த 10 நாட்களாகக் குடிதண்ணீர் கூட இன்றிச் சிக்கியிருந்த 'லுஹைடாவ்' என்ற சீனத் தொழிலாளியை நேபாள இராணுவமும் தென் கொரிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து உயிருடன் மீட்டுள்ளன.
சிக்கிய தொழிலாளி
இதேவேளை நுவாகோட் பகுதியில் இடிந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சந்திரிகா ஸ்ரேஸ்தா (64) என்ற நபரும் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் காத்மாண்டுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அத்துடன் இதேபோல நேற்றைய தினமும் சுரங்கப் பகுதியில் இருந்து இருவர் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.