நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப பில்லியன் டொலர்கள் தேவை..!
வெள்ளத்திற்குப் பிறகு, நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டொலர் வரை தேவைப்படலாம் என அந்த நாட்டின் நிதி அமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே இன்று(29.08.2026) தெரிவித்துள்ளார்.
இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கிற்கு சமமான செலவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
4-5 பில்லியன் டொலர்கள் தேவை
அவர் மேலும் தெரிவிக்கையில், ஆரம்பகட்ட மதிப்பீடு 4-5 பில்லியன் டொலர்களுக்கு இடையில் உள்ளது. இது ஒரு மதிப்பீடு மட்டுமே. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது தேவைப்பட்டதை விட மிகக் குறைவான தொகையே நமக்குத் தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பனிப்பாறை சரிவினால், இமயமலை நதி அமைப்புகள் வழியாக பாறை, பனி, மண் மற்றும் சிதைவுகளின் ஒரு மாபெரும் வெள்ளம் பாய்ந்தது.

இதில் நேபாளம் மற்றும் சீனாவின் திபெத்தில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 2,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
நேபாளத்தின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான பேரழிவான, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு செலவிடப்பட்ட 9 பில்லியன் டொலரை விட, புனரமைப்புக்கான செலவு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறனில் 12 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மின் திட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[P8A12EU ]