மனைவியை காட்டுக்குள் அழைத்து சென்று கொடூரமாக படுகொலை செய்த கணவன்
அநுராதபுரம் - கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் பெண்ணொருவர் தனது கணவனால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, தானும் காயப்படுத்திக் கொண்டுள்ளார்.
நேற்று (28) முற்பகல் குறித்த நபர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இந்த வனப்பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு வைத்து அவர் மனைவியை கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
தாக்குதலுக்குள்ளான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த கணவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் உளுக்குலம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாவார்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri