கிரிக்கட்டில் உலக சாதனைகளை குவித்த நேபாளம்
நேபாள கிரிக்கெட் அணி டி20 போட்டி ஒன்றில் 300க்கு மேற்பட்ட ஓட்டங்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளது.
சர்வதேச போட்டி ஒன்றில் நேபாள அணி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொங்கோலிய அணிக்கு எதிராக நேபாள அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 314 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
சர்வதேச போட்டி ஒன்றில் அணி ஒன்றே பெற்றுக் கொண்ட அதி கூடிய மொத்த ஓட்டங்களாக இந்த எண்ணிக்கை கருதப்படுகின்றது.
இதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ரி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 278 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்தது.
இந்த போட்டியில் குஷல் மாலா 34 ஓட்டங்களில் சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லர் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 34 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.
திபேந்திரா சிங் 10 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்று அதி குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்து உலக சாதனையையும் நிலைநாட்டி உள்ளார்.
2007 ஆம் ஆண்டு இந்தியாவின் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைச்சதம் அடித்து நிலைநாட்டியிருந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
போட்டி ஒன்றில் அதிக உடைய ஆறு ஓட்டங்களை பெற்ற சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது.
நேபாளானி 26 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் அணி 22 ஆறு ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்தது.