தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை!
தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விரைவில் இரு நாட்டு அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் விரைவில் அதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் இந்திய மீனவளத்துறை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாணம் கலாசார நிலையம் திறப்பு விழா முடிந்து, தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல் முருகன் மற்றும் பாரதிய ஜனதாக்கட்சியின் தமிழகப் பிரிவுத் தலைவர் கே அண்ணாமலை ஆகியோர் நேற்றைய தினம் (12.02.2023) இலங்கையிலிருந்து தமிழகம் திரும்பியுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்
இதன்போது செய்தியாளர்களிடம் கருத்துரைத்த அமைச்சர் முருகன்,
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையம், இலங்கை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த மையம் யாழ்ப்பாண மக்களின் நலனுக்காக முற்றிலும் இந்திய அரசின் நிதியில் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டமை வரலாற்றுச்
சிறப்புமிக்க தருணம் என அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
