கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை
தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் அமைவிட ஏற்பாடுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கை, ஃபைசர் மற்றும் எஸ்ட்ராசெனெகா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
இலங்கையில் ஃபைசர் மற்றும் எஸ்ட்ராசெனெகாவின் முகவரான ஹேமாஸ் மருந்தக நிறுவனம், குறித்த மருந்தக நிறுவனங்களுக்கும் இலங்கையின் சுகாதார அமைச்சுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக நிறுவனத்தின் மருந்தகத்துறை நிர்வாக இயக்குநர் ஜூட் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி குறித்து அரசாங்கத்திடம் ஒரு திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை ஒன்று உள்ளது. இதற்காக உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட வேண்டும்,
இதன்பின்னரே மீதமுள்ள தகவல்கள் இரு தரப்பினருக்கும் இடையில் பகிரப்படுவதுடன் பிற காரணிகளும் ஆராயப்படும் என்றும் ஜூட் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிக்கான விலை, தேவையான அளவு மற்றும் வழங்குவதற்கான திகதி ஆகியவை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாட வேண்டும்.
இந்த தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.
எனவே அவற்றை தாம் இறக்குமதி செய்ய முடியாது என்று ஜூட் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் நடைமுறைகள் உரியமுறையில் பின்பற்றப்பட்டால் அடுத்த ஆண்டு இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டில் இலங்கைக்கு தடுப்பூசிகள் கிடைக்கும் என்று ஹேமாஸ் நிறுவன அதிகாரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள, ரஷ்யா, சீனா மற்றும் உலக சுகாதார அமைப்புடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்