சுற்றாடல் துறை மேம்பாடுகளின் உச்சபட்ச நன்மைகளை அடைய பேச்சு வார்த்தை
ஐக்கிய அரபு ராஜ்யம் மற்றும் இலங்கைக்கிடையிலான உறவுகளில், இருதரப்பும் அடைந்துகொள்ளக் கூடிய அனுகூலங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சுற்றாடல் துறையமைச்சர் நஸீர் அஹ்மட்டுக்கும் ஐக்கிய அரபு ராஜ்யத் தூதுவர் காலித் நாசர் சுலைமான் அல் அமரிக்குமிடையில் நடந்த சந்திப்பிலே, இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் சுற்றாடல் துறை அமைச்சில் நேற்று (09) நடைப்பெற்றது.
சுற்றாடல் துறை

இதன்போது, சுற்றாடல் துறையின் மேம்பாடுகளால், அடையக்கூடிய உச்சபட்ச ஆதாயங்களை அடையாளங்காணல் மற்றும் அவற்றை அமுல்படுத்துவதில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயற்படல்.
மேலும் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்க முறையான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை ஐக்கிய அரபு ராஜ்யம் வழங்குதல் பற்றியே, இச்சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நட்புறவு விஜயம்


நட்புறவு விஜயத்தை, மேற்கொண்டு ஐக்கிய அரபு ராஜ்யத்திலுள்ள தொழில் வாய்ப்புக்களில் இலங்கையரை உள்வாங்குவது பற்றி கவனம் செலுத்துமாறும் ஐக்கிய அரபு ராஜ்யத்தூதுவர் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இலங்கையில் முதலிடுவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்துமாறும் தூதுவரிடம் அமைச்சர் ஹாபிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இச்சந்திப்பில், அமைச்சின் செயலாளர் Dr. அனில் ஜெயசிங்க, முன்னாள் சிரேஷ்ட
இராஜதந்திரி TZ. சம்சுதீன் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam