நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர்..! விரைவில் கைது செய்யப்படவுள்ள பிள்ளையான்
சிறைக் கைதிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் வெளியே கலவரத்தை ஏற்படுத்தி, ஒரு குழப்பமான சூழலை உருவாக்கி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படவே நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் திட்டமிடப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த காலங்களில் இனக்கலவரங்கள் சிறைச்சாலை சம்பவங்களின் மூலமே தொடங்கப்பட்டது.
இது போன்ற குழப்பங்கள் நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகச் சித்தரிக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டு வர பயன்படுத்தப்படலாம்.
விஜயதாச ராஜபக்ச உள்ளிட்ட கடந்த கால ஆட்சியாளர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள இவ்வாறான குழப்பங்களை செயற்கையாக உருவாக்குகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் பிள்ளையான் கைது செய்யப்படலாம் என்றும் குறிப்பிட்டார். அவருக்கு எதிரான பல ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக பிள்ளையான் கைது செய்யப்படுவார் எனவும் தாஹா ஐன்ஸ்டீன் குறிப்பிட்டார்.
கருணாவை பொறுத்தவரை, அத்தகைய நேரடி ஆதாரங்களோ அல்லது அண்மைய விசாரணைகளில் மையப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளோ அவர் மீது வலுவாக இல்லை என்றும் தாஹா ஐன்ஸ்டீன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த விடயங்கள் தொடர்பான விரிவான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க ....
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan