முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்பாக இன்றையதினம்(15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஊழல் வழக்கு
இன்றைய நடவடிக்கைகளின் போது, அரசுத் தரப்பு சாட்சிகள் இருவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.அதனைத் தொடர்ந்து, விசாரணையின் தொடர்ச்சியை செப்டம்பர் 7 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

2014ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றிய காலத்தில் குமார ஜெயகொடி ஊழல் செயல்பாட்டில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கிடங்கு வளாகத்தில் தரைவிரிப்பு (கார்பெட்) அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியபோது, தனியார் நிறுவனமொன்றுக்கு சாதகமாக அவர் செயல்பட்டதாக ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri