மற்றுமொரு கைதியும் உயிரிழப்பு
புதிய இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவரும் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பூசா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி, பின்னர் அங்கு உயிரிழந்தார் என சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டை உலுக்கிய சிறை மோதல்! பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடல்கள்
சிறைச்சாலையில் நடந்த கலவரம்
மரணத்திற்கான காரணம் குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் பலர் உயிரிழந்தும் காயமடைந்தும் இருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
you may like this video