நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை
புதிய இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த அதிகாரிகளுக்கான சிகிச்சை மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்து வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில், இதுவரை கிடைக்கப்பெற்ற அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்களின்படி, 23 சிறைச்சாலை அதிகாரிகள் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 54 கைதிகளும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, 19 கைதிகள் மற்றும் 7 சிறைச்சாலை அதிகாரிகள் என மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று காலை (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
சிறை மோதலில் காயமடைந்து, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த 25 பேரில், 5 சிறை அதிகாரிகளும் 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையின் தற்போதைய நிலவரம்! நள்ளிரவு தாண்டியும் தொடரும் போராட்டம் - பலத்த பாதுகாப்பு
100 பேர் வைத்தியசாலையில் அனுமதி
இந்த மோதல் காரணமாக ஏற்பட்ட காயங்களுடன் சுமார் 100 பேர் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களில் 13 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைகள் இன்று (07) நடத்தப்படும் என்றும், இதற்காக 5 தடயவியல் வைத்திய அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்
நீர்கொழும்பு சிறை மோதல்: கைதிகளால் அடித்து நொருக்கப்பட்ட CCTV கமராக்கள் - தீவிரமடையும் சிஐடி விசாரணை