சமூகவலைத்தளங்களில் பேசுபொருளான சிறை அதிகாரியின் காணொளி..

CID - Sri Lanka Police Negombo Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Kanthan Jul 11, 2026 03:02 PM GMT
Report

நீர்கொழும்பு சிறைக் கலவரம் மற்றும் சிறைக் கைதிகள்-சிறை ஊழியர்கள் தொடர்பில் உருக்கமான மற்றும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து  டி. பி. தசநாயக்க என்ற இரண்டாம் நிலை சிறைக்காவலர் (Jailer) தனது சமூக வலைத்தளத்தில் கொணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த காணொளி மக்கள் மத்தில் போசு பொருளானதுடன் மனதை உருக்கும் சம்பவமாக மாறியுள்ளது. என்னால் இந்தத் காணொளியை (Video) வெளியிட முடியாது என்பதை அறிவேன்.

இதற்காக வழங்கப்படும் எந்தவொரு தண்டனையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இந்தத் காணொளியை வெளியிடுகிறேன்.

அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள்: நான் சமூக ஊடகங்களில் (Facebook) எமது அதிகாரிகள் கருத்து தெரிவிப்பதைக் அவதானித்தேன்.

குறித்த சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பலர் பதிவிட்டுள்ளனர். ஆம், பழிவாங்க வேண்டிய நேரம் இதுதான். ஆனால் நாம் புதிதாகப் பழிவாங்க ஒன்றும் இல்லை. போதைப்பொருள் ஒழிப்பே போதுமானதாகும்.

சிறைச்சாலைக் கலவரம் மொட்டு கட்சியின் அரசியல் சதி: சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி நாமல் ராஜபக்சவுக்கு வேண்டப்பட்டவர்....

சிறைச்சாலைக் கலவரம் மொட்டு கட்சியின் அரசியல் சதி: சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி நாமல் ராஜபக்சவுக்கு வேண்டப்பட்டவர்....

நேர்மையான அதிகாரிகளின் தியாகம்

எமது திணைக்களத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவும் ஒரு சிலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நாம் சட்டப்படியான மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஆனால், கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுக்க முன்வந்தபோதும், அவற்றை ஏறெடுத்தும் பார்க்காத நேர்மையான அதிகாரிகள் எம்மோடு இருந்தார்கள் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் அறிவேன்.

உயிரிழந்த அந்த அதிகாரிகளின் இறுதிச்சடங்கின் போது அவர்களின் வீடுகளை ஊடகங்களில் காட்டினார்கள். கோடிக்கணக்கான இலஞ்சப் பணத்தை நிராகரித்த அந்த மனிதர்கள் எவ்வளவு ஏழ்மையான வீடுகளில் வாழ்ந்துள்ளார்கள் என்பது புரியும்.

அவர்கள் பணத்திற்கு அடிபணியவில்லை. அத்தகைய உன்னதமான மனிதர்களுக்கே இந்த அநீதியும் கொடூரக் கொலை நடந்துள்ளது. இதனை நாம் இத்துடன் அப்படியே விட்டுவிட முடியாது.

நாம் செய்ய வேண்டியது என்ன?

சிறைச்சாலைக்குள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மற்றும் கலவரம் செய்யும் கும்பல்களுக்கு முறையான தண்டனைகளை வழங்க வேண்டிய நேரம் இதுவாகும்.

சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. நமக்கு சம்பளப் பிரச்சினைகள், வாழ்வாதாரக் குறைகள் இருக்கலாம். அவை ஒரு சில வருடங்களில் தீர்ந்துவிடப் போவதில்லை.

சமூகவலைத்தளங்களில் பேசுபொருளான சிறை அதிகாரியின் காணொளி.. | Negombo Prison Clash

அவை தீரும் வரை நாம் எமது கடமையைக் கைவிட முடியாது. சமூகத்தால் நமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நாம் சரியாகச் செய்ய வேண்டிய தருணம் இது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், பதவிகளையோ அல்லது வேலை செய்யும் பிரிவுகளையோ பார்க்காமல், சிறைச்சாலைத் திணைக்களமாக எமது அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்த விதத்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன், நேசிக்கிறேன்.

சிறைக்கைதிகளின் கொடூரமான உண்மை முகம்

அன்று அந்த மோதல் நடந்த வேளையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைக் குறித்தும் அதிகாரிகளின் செயற்பாடுகளைக் குறித்தும் சமூகத்தில் சிலர் மிகக் கேவலமாக, விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த மக்கள் வெளியே வந்து பார்த்தால்தான் உண்மை தெரியும். பொதுமக்களுக்குத் தெரியாத ஒரு உண்மையை நான் கூறுகிறேன்: நாம் இந்தச் சிறைச்சாலைகளுக்குள் அடைத்து வைத்திருப்பது சாதாரண மனிதர்களை அல்ல.

ஒரு பெண்ணை மரத்தில் கட்டிவைத்து மோசமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிறைக்கு வந்து, பின்னர் விடுதலையாகிச் சென்று 15 வயது சிறுமியைக் கொலை செய்துவிட்டு மீண்டும் சிறைக்கு வந்த ஒரு கைதி இருக்கிறான்.

சமூகவலைத்தளங்களில் பேசுபொருளான சிறை அதிகாரியின் காணொளி.. | Negombo Prison Clash

அவன் மீண்டும் பிணையில் வெளியே சென்று, ஒரு தந்தையைக் கொலை செய்துவிட்டு அவரது மகளை மோசமான செயலுக்குட்படுத்திய வழக்கில் மீண்டும் சிறைக்கு வந்துள்ளான்.

இவ்வாறான கொடூர மிருகங்களைத்தான் நாம் எமது உயிரைப் பணயம் வைத்து சிறைக்குள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் வெளியே வந்தால் சமூகத்தின் நிலை என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை எதிரொலி: 600 கைதிகள் மாற்றம் - விசாரணை தீவிரம்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை எதிரொலி: 600 கைதிகள் மாற்றம் - விசாரணை தீவிரம்

மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US