சிறைக்குள் நடந்த துப்பாக்கிச் சூடு - கைதிகள் இறப்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
புதிய இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று(06.07.2026) உயிரிழந்த கைதிகள் அனைவரும் பாதுகாப்புத் தரப்பின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை உணவு வழங்கச் சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், நேற்றைய சம்பவம் தொடர்பில் கைதிகளுடன் ஆக்ரோஷமாக நடந்து கொள்ள முற்பட்டதுடன், ஒருசில கைதிகளை அச்சுறுத்தவும் முயன்றுள்ளனர்.
கைதிகள் தரப்பில் இருந்து அதற்கு எதிர்ப்புக் குரல் வெளிப்படத் தொடங்கியதையடுத்து, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தரப்பில் இருந்தே முதலாவது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகள்
இதனையடுத்து கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இடையே மோதல் எழுந்துள்ள நிலையில், சிறை பாதுகாப்பு தர அதிகாரிகளும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தரப்புக்கு ஆதரவாக தங்கள் கடமையின் நிமித்தம் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளைக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர் இருதரப்பு மோதலும் வன்முறையாக வெடிக்கத் தொடங்கிய நிலையில், கைதிகளை நோக்கி சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தரப்பில் இருந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது, சிவில் உடையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் விமானப்படையினரால் சிறைச்சாலையின் மேற்புற ஆகாயவெளியில் நிலைநிறுத்தப்பட்ட ஆளில்லா உளவு விமானத்தின் மீதும், அது மூன்றாம் தரப்பின் ட்ரோன் விமானமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது
. துப்பாக்கிச் சூடு நடத்தாமல் கைதிகளை கட்டுப்படுத்தி, வன்முறையை தவிர்த்து சிறைச்சாலைக்குள் அமைதி நிலைமையை ஏற்படுத்த போதுமான அவகாசம் இருந்தபோதும், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஆரம்பம் தொட்டே கைதிகளுடன் ஆக்ரோஷம் மற்றும் வன்முறையை வெளிக்காட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் கைதிகள் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
முதலாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று காலை தொடக்கம் வெடித்துள்ள வன்முறையின்போது சிறைக் கைதிகளின் கைகளில் துப்பாக்கிகள் சிக்கியிருக்கலாம் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மோதலின் போது சிறைக்கைதிகளின் கைகளில் சிறைச்சாலைப் பாதுகாப்பிற்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த துப்பாக்கிகள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!
பாதுகாப்பு பலப்படுத்தல்
அவ்வாறான நிலைமையில் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் இன்னும் தீவிரம் பெறக்கூடும் என்ற அச்சம் காரணமாக சிறைச்சாலையைச் சுற்றிலும் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைக்குள் நிலவும் மோசமான சூழ்நிலையைக் கண்காணிப்பதற்காக இன்று காலை இலங்கை விமானப்படை ஒரு ஆளில்லா விமானத்தை அனுப்பியுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் சிறை அதிகாரிகள் உள்ளடங்களாக 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100 பேர் வரையானோர் கடும் படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
You may Like THis..