இந்த கொள்ளையர்களை விரட்ட வேண்டும்! தேரர் தெரிவிக்கும் விடயம் (Video)

Sri lanka War Ajitha Tero
By Benat Nov 22, 2021 03:23 PM GMT
Report

யுத்தத்தை கொண்டாட விகாரைகளை அமைக்க வேண்டுமா? யுத்தத்திற்கும் தர்மத்திற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை. யுத்தம் என்பது மனித கொலை. வாழ்க்கையயை அனுபவித்து நிம்மதியாக வாழவேண்டிய தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என அனைவரும் அநியாயமாக யுத்தத்தில் கொல்லப்பட்டனர் என அஜித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

30 வருடமாக இது எமது நாட்டில் இடம்பெற்றது. தமிழ் சமூகத்திற்கு சிங்கள சமூகத்திற்கு முஸ்லிம் சமூகத்திற்கு முழு இலங்கை சமூகத்திற்கும் 30 வருட காலமாக காணப்பட்ட பாரிய பிரச்சினை தான் யுத்தம்.


உண்மையாக சொல்லப்போனால் எம்முடைய சிறுபராயத்தில் இந்த சிங்கள தமிழ் பிரிவினைகள் இருக்கவில்லை. 12,15 வயதில் தான் எமது தலைகளிலும் இதனை திணித்தார்கள். எனக்கு நன்றாக நினைவுள்ளது. நாம் அந்த காலகட்டத்தில் தமிழ் வைத்தியரிடமே வைத்தியத்திற்கு சென்றோம்.

எங்களுடைய வீட்டின் அடித்தளத்தை அமைத்தவர் தமிழ் தச்சுதொழிலாளி ஒருவர். தீபாவளி தினத்தன்று அந்த தச்சு தொழிலாளியின் வீட்டார் எம்முடைய வீட்டிற்கு உணவு வகைகளை கொண்டு வருவார்கள். எம்முடைய பண்டிகைகளில் நான் எனது அம்மாவோடு அவர்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளேன்.

இப்படித்தான் அந்த காலத்தில் தமிழ் சிங்கள உறவு எம் காலத்தில் காணப்பட்டது. எமக்கு இந்த பிரிவினைகள் தெரியாது. அவர்களிடம் இருந்தும் எம்மிடம் இருந்தும் அன்பு மாத்திரமே எமக்கு தென்பட்டது.

அந்த ஒற்றுமையை உடைக்க தான் தமிழ் சின்கள பாகுபாடே கொண்டுவந்தார்கள். அரசியல் நோக்கத்திற்காகவே இந்த பிரச்சினையை எம் மத்தியில் கொண்டுவந்தார்கள்.

அரசியல் பலத்தை தக்கவைத்துக்கொள்ளவே இதை செய்தர்கள். எமது நாட்டு மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். 83களில் ஜே.ஆர் ஜயவர்தன மிகவும் மோசமான முறையில் இவற்றை கையாண்டார். தமிழ் மக்களை கொலை செய்தார்கள். கடைகளை தீவைத்து எரித்தார்கள்.

இருப்பவற்றை கொள்ளையடித்தார்கள். சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு வைராக்கியத்தை உருவாக்கினார்கள். இன்று காஸ் வரிசையில் அனைத்து மக்களும் நிற்கின்றனர். அனைத்து தாய் மாறும் பால்மாவிற்கான வரிசையில் நிற்கின்றார்கள்.

எரிபொருள் வரிசையில் நிற்கின்றார்கள். இன்று அனைத்திற்கும் வரிசை காணப்படுகின்றது. அரசியல்வாதிகள் விளையாடும் அரசியல் விளையாட்டிற்கு மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

மக்களின் சடலங்களின் மேல் அரசியல் பலத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்ச்சிக்கும் அரசியல் நிறுத்தப்படவேண்டும். தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த கொள்ளையர்களை விரட்டிவிட்டு ஒரு தூய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US