இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி! சிக்கிய பலர் - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தேசிய அபிவிருத்தி வங்கிக்குள் (NDB Bank) நடைபெற்ற பணமோசடி தொடர்பாக, வங்கியின் மேலாளர் உட்பட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி - வாடிக்கையாளர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவுறுத்தல்
வங்கி சேவை
இந்த சம்பவத்தால் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்குகளோ அல்லது வைப்புத்தொகைகளோ பாதிக்கப்படவில்லை என்று தேசிய அபிவிருத்தி (NDB Bank) வங்கி மீண்டும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

மேலும், அனைத்து சேவைகளும் எந்தவித இடையூறும் இன்றி வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த மோசடி வங்கியின் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டுத்துறைக்குள் மட்டுமே நடந்துள்ளது, மேலும் இதில் பல ஊழியர்கள் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சம்பவம் கண்டறியப்பட்ட உடனேயே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தற்காலிகமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், ஆதாரங்களும் பதிவுகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்
மேலும், சம்பந்தப்பட்ட துறை கடுமையான கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் உள்ளகக்கட்டுப்பாடு, அறிக்கையிடல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருவதாக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து இலங்கை மத்திய வங்கிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவையான ஒழுங்குமுறை மேற்பார்வை மற்றும் ஆதரவையும் மத்திய வங்கி வழங்கியுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொது நம்பிக்கையைக் காப்பதில் உறுதியாக இருப்பதாக NDBவங்கி உறுதியளித்துள்ளது.
மேலும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை NDB வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக விளக்கம் கோரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள NDB கிளைகள், அவசர இலக்கம் அல்லது வங்கி மேலாளர்கள் அல்லது 011 744 8850 என்ற வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் தகவல்களை தெளிவுபடுத்திக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam