இலங்கையின் முக்கிய வங்கியில் உள்மோசடி - வாடிக்கையாளர்களுக்கு அவசர அறிவுறுத்தல்
வங்கி ஊழியர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினர் சம்பந்தப்பட்ட மோசடி குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக தேசிய அபிவிருத்தி வங்கி (NDB Bank) தெரிவித்துள்ளது.
இதன் ஆரம்ப மதிப்பீடுகளின்படி, சுமார் 38 கோடி இலங்கை ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள் விசாரணை ஆரம்பம்
இது தொடர்பிலான விசாரணைகளை சட்ட நடைமுறையாக்க அதிகாரிகளிடம் (Law Enforcement Officers) ஒப்படைத்துள்ளதாகவும், உள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் வங்கி கூறியுள்ளது.

மேலும், மோசடியின் முழு அளவை தற்போது மதிப்பிட முடியவில்லை என்றும் வங்கி தெரிவித்துள்ளது. மோசடிகளையும் குறைக்கவும், பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் ஒழுங்குமுறை அமைப்புகளுடன் ஒத்துழைக்கும் என்று NDB, இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இதேவேளை, வாடிக்கையாளர் வைப்புத்தொகைகள் மற்றும் கணக்கு இருப்புகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அதன் தற்போதைய செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் வங்கி மேலும் கூறியுள்ளது.
மேலும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை NDB வங்கி கேட்டுக்கொண்டதுடன், கிளைகள், அவசர இலக்கம் அல்லது வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் தகவல்களை தெளிவுபடுத்திக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்! விமானியை பிடித்தால் பரிசு - நேரடி மோதல் வெடிக்கும் அபாயம்
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri