தலைமன்னாரில் கடற்படை வீரர் சடலமாக மீட்பு
தலைமன்னார் - ஊருமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை வீரர் ஒருவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக தலைமன்னார் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி - கோனாபினுவல பிரதேசத்தில் வசிக்கும் தினேஷ் மதுஷான் ஜயசேகர என்ற 31 வயதுடைய கடற்படை வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனை
குறித்த வீரர் நேற்றுக் காலை (21.06.2023) பணிக்கு வராததால், கடற்படையின் அதிகாரிகள் அவரை அழைத்துவர அவர் தூங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றனர்.
இருந்தும் குறித்த வீரர் எழுந்திருக்காததால், அவரை பரிசோதித்த போது அவர் இறந்து கிடந்தது கண்டு பொலிஸில் முறையீடு செய்யப்பட்டது.
சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது என்று தலைமன்னார் தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |