யாழில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்குள் கஞ்சா பொதிகளை புதைத்து வைத்திருந்த நிலையில் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த காட்டுப்பகுதிக்குள் போதை பொருள் புதைத்து வைத்திருப்பதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்று(05.01.2024) வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு செய்து தேடி வந்துள்ளனர்.
திடீர் சுற்றிவளைப்பு
இதன் போது காட்டுப் பகுதிக்குள் பெருமளவான கஞ்சா பொதிகளை புதைத்துவைத்துள்ள கடத்தல்காரர்கள் பாதுகாப்பு படையினரின் சோதனைகளால் அதை விற்பனை செய்ய முடியாது வந்த நிலையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரமாக 15 இற்கும் மேற்பட்ட கடற்படையினர் புலனாய்வாளர்களுடன் தேடுதல் நடத்திவந்த நிலையில் 55Kg பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பசில் நாடு திரும்பியதும் ஆரம்பமாகவுள்ள நடவடிக்கை : ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டு வெளியிட்டுள்ள அறிவிப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan