இலங்கையின் நடு கடலில் 35 பேரை காப்பாற்றிய கடற்படை
புத்தளம் கல்பிட்டி படகு துறையில் இருந்து பத்தலங்குண்டு தீவு நோக்கி 35 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு இன்று மதியம் நடு கடலில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதனையடுத்து கல்பிட்டி கடற்படை முகாமை சேர்ந்த படையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பயணிகள் அனைவரையும் காப்பாற்றியுள்ளனர்.
படகிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது

இதன் பின்னர், பயணிகள் பத்தலங்குண்டு தீவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளை ஏற்றிச் சென்ற படகிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது.ஏதோ ஒரு பொருள் படகின் அடியில் மோதியதில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பத்தலங்குண்டு தீவில் குடியேறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும், மீன் வியாபாரிகளுமே படகில் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் கல்பிட்டி பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri