நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை! தயார் நிலையில் கடற்படையினர்
இலங்கைக்கு வடகிழக்கே, வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த அழுத்த பிரதேசம் காரணமாக, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 171 கடற்படை பேரிடர் நிவாரணக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று (21) காலை நிலவரப்படி 14 பேரிடர் நிவாரணக்குழுக்கள் தெற்கு மற்றும் மேற்கு கடற்படை தளபத்தியங்களால் களமிறக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தயார் நிலையில் கடற்படை
அதன்படி தெற்கு கடற்படை தளபத்தியத்தின் கீழ் தவலம பகுதியில் 2 குழுக்களும், ஹினிதும, மாபலகம மற்றும் நாகொட பகுதிகளில் தலா ஒரு குழுவும் என 5 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

மேற்கு கடற்படை தளபத்தியத்தின் கீழ் நாவலப்பிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை பகுதிகளில் தலா 2 குழுக்களும், சீதாவக்கையில் 2 குழுக்களும், இரத்தினபுரியில் 3 குழுக்களும் என 9 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வங்காள விரிகுடாவில் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையும் தாழமுக்கம்! வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்


