தேசத்திற்கு 25 துப்பாக்கி சூட்டு வணக்கம் செலுத்திய இலங்கை கடற்படை
இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் தற்போது சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
“இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை கடற்படை இன்று (04) 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசத்திற்கு 25 துப்பாக்கி சூட்டு மூலம் தனது வணக்கத்தை செலுத்தியுள்ளது.
14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நீண்ட வரலாறு
கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில் காலி முகத்திடலில் உள்ள இலங்கை கடற்படை கப்பலான சயுராவில் இது நிகழ்த்தப்பட்டுள்ளது.

தேசத்தை கௌரவிக்கும் வகையில் 25 துப்பாக்கி குண்டுகள் மட்டுமே வழங்கப்படுவதுடன், இவை 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri