குடும்பஸ்தர் ஒருவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்த கடற்படை சிப்பாய்
மாத்தளை மாவட்டத்தின் மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகுலுகஸ்வெவ பொலிஸாருக்கு, நபர் ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீண்டகாலமாக ஏற்பட்ட தகராறு
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு நபர் அவரை நிறுத்தி மோட்டார் சைக்கிள் சென்ற பாதையை மறித்துள்ளார் .
பின்னர் அவரை தாக்கி கொலை செய்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் தேவஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடையவராகும்.
சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் உயிரிழந்தவருடன் நீண்டகாலமாக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் தம்புள்ளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மகுலுகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
