சட்டவிரோத கடற்றொழிலாளர்களால் வெறுமையாக்கப்படும் வடக்கின் கடல் வளம்! ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
வடக்கின் கடல் வளம் புறத்தே இந்திய இழுவைப்படகுகளாலும் அகத்தே சட்டவிரோத கடற்றொழிலாளர்களாலும் வெறுமையாக்கப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
அத்தோடு, இறைமையை காக்க இயலாத இலங்கை கடற்படையும் சட்டவிரோத தொழில்முறைகளை கட்டுப்படுத்த இயலாத கடற்றொழில் அமைச்சாலும் கடற்றொழிலாளர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியால் இன்று(09.10.2026) கொண்டு வரப்பட்ட பிரேரணையில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
அதேவேளை நுண்நிதி கடன் நிறுவனங்களின் அதீத சுரண்டல்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு நியாயமான வங்கிக் கடன்களை அணுகுவதில் உள்ள தடைகளை அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், நியாயமான வட்டிக் கடன் வசதிகளை கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்குவது உள்ளிட்ட மாற்று நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதீத சுரண்டல்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு நியாயமான வட்டிக் கடன் வசதிகளை கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்கல் உள்ளிட்ட மாற்று நடைமுறைகளும் சமநேரத்தில் வலுவூட்டப்படக்கூடியதாக மேற்படி வேலைத்திட்டம் அமையவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை