தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகத்துடன் இணையுமாறு நவநீதம் பிள்ளை கோரிக்கை !
இலங்கையிலே தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என நோபல் அமைதிப் பரிசு பெற்ற ஐ.நா முன்னாள் மனித உரிமைகள் தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இலங்கை போரில் உயிரிழந்த 146000 தமிழர்களை நினைவு கூர்ந்து அவர் ஆற்றிய உரையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுயநிர்ணயப் போராட்டத்திலே பாதிக்கப்பட்ட தமிழர்களை நாம் நினைவு கூர்வது முக்கியமானதாகும்.
தமிழ் மக்களுக்கான உரிமை
தமிழர்கள் தொடர்ந்தும் நாட்டிலே பாகுபாடுகள், பராபட்சங்கள் விதிமீறல்களை எதிர்கொள்கின்றனர்.

இராணுவத்தினரால் பறிக்கப்பட்ட தமிழ் மக்களினுடைய நிலங்கள் இன்னும் மீள ஒப்படைக்கப்படவில்லை.
நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைய வேண்டும்.தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.