கூட்டணி உருவானால் தலைமைப் பதவியை சஜித் ஏற்பதில் பிரச்சினையில்லை - நவீன் திஸாநாயக்க அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்த பின் கூட்டணியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாஸ ஏற்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்தலில் இட ஒதுக்கீடுகளை மேற்கொள்ளலாம். முகாமைத்துவ குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
சஜித்திற்கு தலைமைப் பதவி
இரு தரப்பில் இருந்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இரு தரப்பினரும் ஏற்கக்கூடிய ஒருவர் பொதுச்செயலாளர் பதவிக்கு வரவேண்டும். கூட்டணியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குவதில் பிரச்சினை கிடையாது.

ஏனெனில் அவர்களுக்குதான் ஆதரவு தளம் அதிகமாக உள்ளது. இந்த உண்மையை ஏற்க வேண்டும். கூட்டணியின் தலைவராக சஜித்தும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவும் செயற்பட வேண்டும்.
கட்சி ஆதரவாளர்களின் மனநிலையை ரணில் விக்ரமசிங்கவும் தற்போது புரிந்துகொண்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் எமக்குப் பயணிக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்தால் வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியும் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam