பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்
பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளராக நவீத் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஸ்டூவர்ட் லா பொறுப்பேற்ற பிறகு வெற்றிடமாக இருந்த இடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நவீத் நவாஸ் இதற்கு முன்பு 2018 முதல் 2020 வரை பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார்.

2020 19 வயதிற்கு உற்பட்ட உலகக் கோப்பையை பங்களாதேஷ் வெல்ல இவர் வகித்த பங்கு அளப்பரியது. அதன் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் துணைப் பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகள் (2022-2024) பணியாற்றிய அவர், மீண்டும் பங்களாதேஷிற்கு திரும்பியுள்ளார்.
அவரைத் தவிர, பாகிஸ்தானின் இஜாஸ் அகமது மற்றும் இந்தியாவின் வாசிம் ஜாஃபர் ஆகியோரும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தால் 19 வயதுக்குட்பட்டோருக்கான புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam