ஐக்கிய தேசியக்கட்சியின் துணை தலைவர் பதவிக்கு புதிய நியமனம்
முன்னாள் விளையாட்டு, சுற்றுலா மற்றும் பெருந்தோட்டத் தொழில் அமைச்சரும், சபரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான நவீன் திசாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று(14.02.2025) கொழும்பில் நடைபெற்றபோது, இந்த நியமனத்தை, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வழங்கினார்.
அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான நவீன் திசாநாயக்க, முன்னைய அரசாங்க நிர்வாகங்களில் முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
காமினி திசாநாயக்கவின் மகன்
சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், இங்கிலாந்தின் மிடில் டெம்பிளில் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.
இவர், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் முக்கிய தலைவர் காமினி திசாநாயக்கவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 5 நாட்கள் முன்
![விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.. யாரு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/ce301a4b-2883-4c9b-ae52-8715313c2c0d/25-67aef65734dc0-sm.webp)
விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.. யாரு தெரியுமா? Cineulagam
![444 நாட்கள் மற்றும் 400 நாட்கள் கொண்ட SBI FD.., ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் எதில் அதிக லாபம் கிடைக்கும்?](https://cdn.ibcstack.com/article/b79a7323-e482-49d7-8a0b-51209b27dd3b/25-67af149b9ae75-sm.webp)