நற்பலன்களைத் தரும் நவராத்திரி ஆரம்பம்!: பூஜை முதல் பலன்கள் வரை முழுமையான தகவல்களை வழங்குகிறார் வைத்தீஸ்வரக் குருக்கள் (Video)
அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.
நவராத்திரி விழாவானது நாளை (26.09.2022) தொடங்கி அக்டோபர் (5.10.2022) அன்று முடிவடைகிறது.
ஒரு வருஷத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு. அவற்றில் புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.
ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள்.
இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
இந்நிலையில், நவராத்திரி பூஜை முதல் பலன்கள் வரை முழுமையான தகவல்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி சிவஸ்ரீ கே.வீ.கே. வைத்தீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.