இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நேட்டோ விடுத்துள்ள எச்சரிக்கை
ரஷ்யாவுடன் தொடர்ந்தும் வர்த்தகத்தில் ஈடுபட்டால், பொருளாதார தடையை எதிர்நோக்க நேரிடும் என்று நேட்டோ அமைப்பு இந்தியா மற்றும் சீனாவை எச்சரித்துள்ளது.
நேட்டோ அமைப்பின் தலைவர் மார்க் ருட்டே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் படையெடுப்பை நிறுத்தக்கோரி, அமெரிக்கா வலியுறுத்தி வருகின்ற நிலையில், ரஷ்யா அதற்கு உடன்பட மறுத்து வருகிறது.
எச்சரிக்கைக்கான காரணம்
இதன் மத்தியிலேயே நோட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களை அடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்துள்ளன.
எனினும், அதனை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய், மற்றும் ஆயுதங்களை கொள்வனவு செய்து வருகின்றமையே நோட்டோவின் இந்த எச்சரிக்கைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
