நாடளாவிய ரீதியில் சிறப்பு சோதனை - கண்டறியப்பட்ட விதிமீறல்கள்
லஞ்ச் சீட் (Lunch Sheets) மற்றும் சிலி-சிலி (Sili-Sili) பொலித்தீன் பைகள் தொடர்பில் 104 விதிமீறல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்புச் சோதனை நடவடிக்கையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சோதனை முன்னெடுப்பு
கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி அன்று 22 மாவட்டங்களை மையப்படுத்தி இது தொடர்பான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது, லஞ்ச் சீட் தொடர்பில் 43 விதிமீறல்களும், 'சிலி-சிலி' பைகள் தொடர்பில் 58 மீறல்களும் கண்டறியப்பட்டுள்ளன.

2019 நவம்பர் 29ஆம் திகதியிட்ட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 70ஆம் இலக்கக் கட்டளை நடைமுறைகளுக்கு அமைவாகவே லஞ்ச் சீட்கள் மற்றும் உணவு சுற்றப்படும் கடதாசிகள் (Food wrappers) விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.
சிலி-சிலி பைகளை இலவசமாக வழங்க முடியாது
2025 அக்டோபர் முதலாம் திகதி திகதியிட்ட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளையின் கீழ், "சிலி-சிலி" பைகளை நுகர்வோருக்கு இலவசமாக வழங்க முடியாது.
அவை விற்பனை செய்யப்பட்டால், அதன் விலை தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனோஜன் விவகாரம் தொடர்பில் அவரது சட்டத்தரணி கூறியுள்ள விடயம்! எழுத்துமூல தீர்ப்பு குறித்து வெளியிடப்பட்ட தகவல்