நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் கைது நடவடிக்கை : டிரன் அலஸ் வெளியிட்டுள்ள தகவல்
நாடளாவிய ரீதியில் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட 1,091 பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
இவர்களில் சுமார் 135 பேர் சிறையில் இருந்து கொண்டே குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த தகவல் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வரலாற்றில் முதல் தடவையாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புகைப்படக்கருவி அமைப்பை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயற்சிக்கும் தேடப்படும் குற்றவாளிகளின் கண்காணிப்பை மேம்படுத்துவதை நோக்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புலனாய்வுப்பிரிவினரும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இணைந்து இலங்கை முழுவதும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களின் பட்டியலை தொகுத்துள்ளனர்.
இந்த முயற்சிகளின் மூலம் கைது செய்யப்பட்ட ஏராளமானவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
